தருமபுரி பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட்டில் விற்பனை மும்முரமாக நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

தருமபுரி பூ மார்க்கெட்டில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.

மாலை மலர்

தருமபுரி:

சுபமுகூர்த்த நாட்கள் என்றாலே சம்பங்கி, குண்டுமல்லி, பூக்களுக்கு  மவுசு அதிகம், தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான சாகுபடி செய்யும் பூக்களில் சம்பங்கி, சாமந்தி, அலரி, ரோஸ், குண்டுமல்லி, காக்கனாம் பூ, ஆகிய வையாகும்.

 தற்போது தமிழ் மாதங்களான தை, மாசி, பங்குனி, உள்ளிட்ட மாதங்களில் வர பணி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, குண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் செடி யிலேயே கருகி வளர்ச்சி குன்றி வருவதால் பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

 மேலும் தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் இவ்விரண்டு பூக்களின் தேவைகள் அதிகப்படியாக உள்ளது. இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டில் நேற்று 50 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி இன்று 120 ரூபாய்க்கும் குண்டுமல்லி 300 ரூபாயிலிருந்து 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,