தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பனைகுளம் பகுதியில் கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 2 பேர் ஆக்கிரமித்து நீண்டு நாட்களாக செங்கல் சூளை நடத்தி வந்தனர்.
நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ் நாடு கோவில் சட்டம், 1959 பிரிவு 78-ன் கீழ் நோட்டீஸ் வழங்கியும், அப்புறப்படுத்தாததால் உரிய கால அவகாசத்திற்கு பின்னர், இந்து அறநிலையதுறை ஆய்வாளர் சங்கர் கணேஷ், செயல் அலுவலர் விமலா, பாப்பாரப்பட்டி ஆர்.ஐ.ஜெயலட்சுமி, பனைகுளம் வி.ஏ.ஓ. கல்பனா, பாப்பாரப்பட்டி எஸ்.ஐ மாதையன், மதலைமுத்து மற்றும் போலீசார் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.