தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள தொப்பையாறு அணைப்பகுதியில் தொப்பூர் முதல் பொம்மிடிக்கு செல்லும் பிரதான சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலையின் நடுவில் பிளவுகள் ஏற்பட்டது.
இந்த சாலையின் வழியாக அதிகளவில் பேருந்துகளும் சிறிய ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் செல்கின்றன.
இந்த வாகனங்கள் அப்பகுதிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை சாலையை சீரமைப்பதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.