தருமபுரி சந்தைபேட்டை ரோட்டில் தர்ப்பூசணி விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தருமபுரி:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இத னால் குளிர்பானங்களில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், விவசாய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும். இங்கு தக்காளி, கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் விவ சாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்தாண்டு பெய்த தென் மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்து அதிக விளைச்சலை சந்தித்தனர்.

தற்போது கடந்த ஒரு காரணமாக தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங் களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்து வருகிறது. காலை 11 மணி முதலே வெயிலின் உக் கிரம் அதிகரிக்க தொடங்கி விடு கிறது. நேரம் செல்ல செல்ல அனல் காற்றும் வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வெயில் வறுத்தெடுத்து வருவதால் பொதுமக்கள், குளிர்பான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக பழ ஜூஸ், இளநீர், தர்ப்பூசணி, வெள் ளரிக்காய், மற்றும் கம்பங்கூழ் ஆகியவற்றை விரும்பி குடித்து வருகின் றனர். இதனால் குளிர்பான கடைகளில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடை களில் பீர் பாட்டில்கள் விற்பனை அதிகரிக்க தொடங் கியுள்ளது. மது பிரியர் கள் கூட தற்போது பீருக்கு மாறி விட்டனர். 

இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.