தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் இன்றுகாலையில் பெண்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து ஓட்டுபோட காத 
உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சி - 10 பேரூராட்சிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தருமபுரி நகராட்சி - 10 பேரூராட்சிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  இன்று (சனிக்கிழமை) நடை பெற்றது. 

தருமபுரி நகராட்சி மற்றும் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பி.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பாரப் பட்டி ஆகிய 10 பேரூராட் சிகளில் உள்ள மொத்தம் 159 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. 

தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் பதிவுகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் போட்டி போட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 37 ஆண் சாவடிகளும் 37 பெண் வாக்குச் சாவடிகளும் மற்றும் 154 ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்க ளிக்கும் வாக்குச் சாவடிகளில் என மொத்தம் 228 வாக்குச் சாவடிகள்அமைக்கப் பட்டிருந்தன. தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும்  இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்களும் ஆண்களும் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். 

இதில் முதல்முறையாக ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்களும் வரிசையில் நின்று தங்களது வாக்கா ளர் அடையாள அட்டையை காண்பித்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாக்குச் சாவடி களிலும்  காலை 6.30 மணியளவில் வேட் பாளர்களின் பூத் ஏஜெண் டுகள் வந்தனர். 

அந்தந்த வார்டுக்குரிய வாக்காளர்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வார்டு பாகம் எண் ஆகியவற்றை சரிபார்த்து வாக்களிக்க அனுப்பினர்.

ஓட்டு போட வந்த ஆண்- பெண் வாக்காளர்களுக்கு தெர்மா ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசர், முகக் கவசம்,கையுறை ஆகிய வையும் வாக் காளர்களுக்கு வழங்கப் பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்பேரில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கையுறை வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்கார். 

மேலும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவௌ¤யை கடைபிடித்து அமைதியான முறையில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.