குடிசை வீடுகள் எரிந்து கொண்டிருக்கும் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

2 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 2 குடிசை வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது.

மாலை மலர்

காரிமங்கலம், 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முக்குளம் ஊராட்சி சாமியார் கொட்டாய் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (வயது55), முருகேசன் (62) ஆகியோர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். சொந்தமாக இவர்களுக்கு குடிசை வீடு இருந்துள்ளது. 

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை குடிசை வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.  நேற்று மாலை குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றனர். 

ஆனாலும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் பாப்பாத்தி வீட்டில் வைத்திருந்த 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பீரோ வீட்டு உபயோக பொருட்கள் சாம்பலானது. மேலும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் இருந்த பீரோ, டிவி, வீட்டு உபயோக பொருட்கள் ஆதார் கார்டு,  உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. 

குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குடியிருந்த வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால் மாற்று வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.