உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.

வட்டார தலைவர் ரஜினி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கணினி ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT