உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகிரி பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கிட்டப்பா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், நகர துணைச் செயலாளர் குரு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

SCROLL FOR NEXT