விழுப்புரம்:
டெல்லியை சேர்ந்தவர் சித்ரஞ்சன் நாயக். இவர் தனது மனைவி பக்கிரா, மகள் தாரா நாயக் (வயது 12) ஆகியோருடன் புதுவை மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். இவர் ஆரோவிலில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தங்கும் விடுதியின் 5-வது மாடியில் உள்ள அறையில் சித்ரஞ்சன் நாயக் தங்கினார். அப்போது அறையை விட்டு வெளியில் வந்த தாரா நாயக்கின் அலறல் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியில் வந்தனர்.
அப்போது தாரா நாயக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்ட பெற்றோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார், சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேணும் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.