பல்லடம் :
பல்லடம் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையங்களில் உரிமம் கோரப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 60 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுவதாக பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறுகையில், பல்லடம் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 2021 செப்டம்பா் 16ந் தேதி முதல் விபத்து, திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பல்லடம் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 21 வாகனங்கள் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 39 வாகனங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 60 வாகனங்களுக்கு உரிமையாளா்கள் யாரும் உரிமம் கோராததால், வாகனங்கள் சேதமடைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த வாகனங்களை பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.