நாகேஸ்வரமுடையார் கோவிலில் நடிகை வடிவுக்கரசி சாமி தரிசனம் செய்தார். 
உள்ளூர் செய்திகள்

நாகேஸ்வரமுடையார் கோவிலில் நடிகை வடிவுக்கரசி சாமி தரிசனம்

ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி ராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது.

இக்கோவிலில் அமிர்த ராகு பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இக்கோவிலுக்கு பல்வேறு பக்தர்கள் வருகை புரிந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் இக்கோவி லுக்கு திரைப்பட நடிகை வடிவுக்கரசி தனது மகள் மற்றும் பேத்தியுடன் வருகை புரிந்தார்.

கோவில் சிவாச்சாரியார் முத்துக்கு ருக்கள், கணக்கர் ராஜி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நாகேஸ்வ ரமுடையார் சுவாமி, பொன்னாகவல்லி அம்மன் ஆகிய சாமி சந்திகளில் தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்.

கோயில் முத்துக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் அவர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.