உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளிக்கு சரமாரி வெட்டு

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் காம்பவுண்ட் அருகே சிலர் மதுகுடித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அசாம் மாநிலம் மொரிக்கன் மாவட்டத்தை சேர்ந்த முகுதுகில் இஷாம் (வயது 24) என்பவர் ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மதுகுடிப்பது குறித்து தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு முகுதுகில் இஷாம் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை முகுதுகில் இஷாம் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், எப்படி எங்கள் மீது புகார் கூறலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முத்தம்மாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT