தருமபுரி,
தமிழர்களின் திருநாளாம் தை திருநாளை தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் தைப்பொங்கலை புது பானையில் பொங்கல் வைத்து குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.
இரண்டாவது நாளான நேற்று மாட்டுப்பொங்கலை அனைத்து கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து கிராமங்களில் உள்ள பொது மண்டு பகுதியில் பொங்கல் படையில் வைத்து பூஜை செய்து புனித நீரை கால்நடைகள் மீது தெளித்து சந்தோஷமாக விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு, எருதாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்றாவது நாளான இன்று கரிநாள் என்பதால் விருந்திற்க்காக ஒவ்வொரு கிராமங்களிலும் ஆடுகள் பலியிடப்பட்டது. தருமபுரி நகரப் பகுதியில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன், உள்ளிட்ட கடைகளில் காலையிலிருந்து கூட்டம் அலைமோதியது .