சூலூர்
சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் ஒட்டர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேச்சிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மேளாவில் 8 நபர்களுக்கு பயிர் கடனாக 8 லட்சம் ரூபாய்க்கும், மகளிர் குழு கடனாக 12 குழுக்களுக்கு ரூபாய் 15 லட்சத்துக்கும், மாற்றுத்திறனாளி கடன் தொகையாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான கடன் மனுக்கள் பெறப்பட்டன. சங்கத்தின் செயலர் சகாய பவுலின் மேரி நன்றி கூறினார்.