சென்னை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 293 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
42 இடங்களில் அதிமுகவும், 30 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில்
சென்னை மாநகராட்சி தேர்தலில் 57 இடங்களில் திமுகவும், 5 இடங்களில் அதிமுகவும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் திமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆவடி மாநகராட்சி தேர்தலில் திமுக 5 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 17 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக 27 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கடலூர் மாநகராட்சி தேர்தலில் திமுக 15 இடங்களிலும், அதிமுக ஒர இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக 22 இடங்களிலும் அதிமுக 1 இடத்திலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.