உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

வீட்டில் தண்ணீர் ஏற்றுவதற்காக மோட்டாரை சங்கர் ஆன் செய்தும் தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் மோட்டாரை ஆன் செய்து வைத்தபடி அதில் தண்ணீர் ஊற்றி உள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஆசிர்வாத நகர் 1-வது தெருவை சேர்ந்த வர் சங்கர் (வயது28). கட்டிட தொழிலாளி. இவருக்கு மகா லட்சுமி என்ற மனைவி யும், மகேஸ்வரன் என்ற 8 மாத மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் தண்ணீர் ஏற்றுவதற்காக மோட்டாரை சங்கர் ஆன் செய்தும் தண்ணீர் வர வில்லை என தெரிகிறது. இதனால் மோட்டாரை ஆன் செய்து வைத்தபடி அதில் தண்ணீர் ஊற்றி உள்ளார். அப்போது சங்கர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக தூத்து க்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோ தித்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண் முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.