சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

தேனியில் சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தேனி:

தேனி மாவட்ட விளையாட்டு கழகம், தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் கவிஞர் அம்மு ராகவ் எழுதிய ஆதிலா கவிதை நூல் குறித்த ஆய்வுரை மற்றும் சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.

விழாவுக்கு தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பெஸ்ட் ரவி முன்னிலை வகித்தார். வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.

தேனி வைகை அரிமா சங்கத் தலைவர் கண்ணன், தேனி மாவட்ட விளையாட்டு கழக பொருளாளர் சின்னசாமி, வைகை தமிழ்ச்சங்க இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் தேனி மாவட்ட விளையாட்டு கழக கவுரவ தலைவர் கலா பாண்டியன் கலந்து கொண்டு கவிதை நூல் ஆய்வுரை செய்த கவிஞர் அம்மு ராகவ் மற்றும் சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கினார். முடிவில் தேனி மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.