திண்டுக்கல்:
5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தினமும் பெட்ரோல், டீசல், விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.