கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மடத்துக்குளம் அருகே திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய சமுதாய நலக்கூடம்

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் இதைப்பயன்படுத்தினர். இதற்கு பின்பு பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு வசிப்பவர்கள் மற்றும் அருகில் உள்ள வார்டு பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்துவதற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு விசேஷம், நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பின் மக்கள் இதை பயன்படுத்தாததால் பாழடைந்து, திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது.

தற்போது இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் முழுவதும் உடைந்து விட்டது. மேற்கூரை படிக்கட்டுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

10 ஆண்டுகளுக்கு  முன்பு வரை  மக்கள் இதைப்பயன்படுத்தினர். இதற்கு பின்பு பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த வளாகம் முழுவதும் புதர்கள் வளர்ந்துள்ளது. இதோடு அருகில் வாய்க்கால் செல்வதால் விஷப்பூச்சிகள் வசிப்பிடம் ஆகிவிட்டது. 

நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் மிகவும் சிதிலமடைந்து உள்ள இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT