உள்ளூர் செய்திகள்

திடீர் மின்தடையால் பொது மக்கள் அவதி

மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்‌.தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூதலூர்:

திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.

தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.

5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.

இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.