உள்ளூர் செய்திகள்

மானூர் அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

மானூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 18).

இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(26). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அரவிந்தை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு சென்றார்.

மானூர் பல்லிக்கோட்டை அருகே சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் தேடி வருகின்றனர்.