உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி திடீர் மாயம்

காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

மாலை மலர்

அன்னதானப்பட்டி:

சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் . இவரது மகள் காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.