கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

போடி அருகே கல்லூரி மாணவி மாயம்

சம்பவத்தன்று கல்லூரி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே நந்தவனம் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் கார்த்தியாயினி (வயது20). இவர் போடி தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செல்வக்குமார் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT