உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.

அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT