உள்ளூர் செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க கலெக்டர் உத்தரவு

கலெக்டர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் பிரச்சினைகளை மாவட்ட கலெக்டர் முன்பு எடுத்துக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை, ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT