கோவை:
கோவை மாவட்டத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறையினர் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து முகாம்கள் அமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில 1,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 2,530 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 602 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு குண மடைந்தவர்களின் எண் ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 477 ஆக அதிகரித் துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங் களில் 8,754 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அன்னூர் ஒன்றியத்தி நேற்று எல்லப்பாளையம், புதுப்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
24 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எஸ்.எஸ்.குளம் ஒன்றியத் தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அன்னூர் தாலுகாவில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200&யை தாண்டி உள்ளது.