கோவை:
கோவை போத்தனூர் அருகே வசித்தவர் 36 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். . இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு கரும்புக்கடையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து அவரை பாலியல் பலாத்க £ரம் செய்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யுமாறு கூறினார். ஆனால் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அவர் இளம் பெண்ணுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இளம்பெண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் மீண்டும் அவரை தொடர்பு கொண்டார். அப்போது போனை எடுத்து பேசிய இளம்பெண் தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார்.
இதனையடுத்து உறவினர் உடனடியாக இளம் பெண்ணின் வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டி ற்குள் மயங்கிய நிலையில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.