கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழில் அதிபர் திடீர் சாவு

நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழில் அதிபர் முச்சுத்திணறல் ஏற்பட்ட இறந்தார்.

மாலை மலர்

கோவை: 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணபிரபு (வயது 38). தொழில் அதிபர். இவர் தொழில் சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வந்தார். 

இதற்காக ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.  சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றார். 

அங்கு வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு திரும்பினார். நள்ளிரவு திடீரென சரவணபிரபுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.