கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கோவை மாநகரில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்

5 மண்டலங்களிலும் இதுவரை ரூ.84 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், பேக்கரிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இதனை கண்காணிக்க மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது  அபராதம் விதித்து நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள். 

கிழக்கு மண்டலத்தில் முககவசம் அணியாத வர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 6,800 கடைகள், நிறுவனங்கள் என ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

வடக்கு மண்டலத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.4,400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகளை என ரூ.11,500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு மண்டலத்தில்ரூ.20,400, மேற்கு மண்டலத்தில் ரூ.21,200, மத்திய மண்டலத்தில் ரூ.10,200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 5 மண்டலங்களிலும் இதுவரை ரூ.84 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.