கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 24). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி பழைய பஸ் நிறுத்தம் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றார்.

பேக்கரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளே டீ குடிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அரவிந்த் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து திருட்டு போன மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பொள் ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்த பாரதி கண்ணன் (21) மற்றும் திருப்பூரை சேர்ந்த வெள்ளிங்கிரி என்கிற தமிழ்செல்வன் (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து  அரவிந்தின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் பாரதி கண்ணன் மற்றும்தமிழ்செல்வனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.