தென்னங்கன்றுகள் நடப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

தென்னங்கன்றுகள் நடும் விழா

பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.101 தென்னங்கன்றுகள் மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நடப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தாழ்ந்தொண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்று வந்தது.

அதன் நிறைவாக திருமுல்லைவாசல் கடற்கரை ஓரங்களில் நெகிழிகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளும், அதன்பின்னர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் மகாதீர் குடும்பத்தார் அளித்த 101 தென்னங்கன்றுகளை மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி த்திட்ட மாணவர்களால் நடப்பட்டது.

உதவித் தலை மையாசிரியரும், திட்ட அலுவலருமான ராசேந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.

இதில் மாணவர்கள்,கிராமமக்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT