பொதுமக்கள் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

2 மாதத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கீழவாசல் பாரதி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.

ஆனால் அதன் பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்களால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இன்று மதியம் கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பொதுமக்கள் திரண்டனர்.

திடீரென அந்த வழியாக வந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்