உள்ளூர் செய்திகள்

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை பூஜை திருவிழா - நாளை இரவு தொடங்குகிறது

ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை பூஜை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்குகிறது.விழா நாட்களில் தினசரி காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடைபெறும்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள ஐந்து வீட்டு சுவாமி கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.இங்கு வருடம் தோறும் சித்திரை பூஜை பெரும் திருவிழா 8 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து. மே 1-ந் தேதி (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு சுவாமிகளுக்கு மேக்கட்டி கட்டுதல், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மேக்ககட்டி பூஜையும் நடைபெறும். திருவிழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.தினசரி காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடை பெறும்.

மே 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) இரவு 7 மணிக்கு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, 3-ந்தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நாகர்கோவில் இன்னிசை நிகழ்ச்சி பட்டிமன்றம் ,5-ந்தேதி மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு ,இரவு 7 மணிக்கு நெல்லை ராஜா வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி, 6-ந்தேதி பகல் 11 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு அன்ன முத்திரி சிறப்பு பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

இந்த பிரசாதத்தை பூஜை அறையில் வைத்து வணங்கு வார்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்த பிரசா தத்தை பயன்படுத்து வார்கள். மே 7-ந்தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

பக்தர்கள் காது குத்தி, மொட்டை போட்டு தங்களது வேண்டுதல்களை செலுத்து வார்கள். குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகு ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

திருவிழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலை யத்துறையின் தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்பு மணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி கோவில் தக்கார் ராம சுப்பிர மணியன், செயலாளர் ஜெயந்தி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.