உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது.இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குழந்தைகளும் வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா குழந்தைகளை வாழ்த்தி ஆங்கிலப் பாடலை பாடினார்.

பொது அறிவுப் போட்டி , விளையாட்டுப் போட்டிகளைத் தொ டர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரி யர்கள் தங்களது மாணவ , மாணவிகளுக்கு குழந்தை கள் தின நினைவாக சிறப்பு அன்பளிப்பை வழங்கினர். பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரி யர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினர்.