உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.

அரவேணு

நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT