விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் பேசினார். அருகில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்று 
உள்ளூர் செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்பதால் நீதிமன்ற தேவை ஏற்படுகிறது என நீதிபதி பேச்சு

குற்றங்கள் அதிகரிப்பதால்தான் கூடுதல் நீதிமன்றம் திறக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் கொடைக்கானல் விழாவில் பேசினார்

கொடைக்கானல்:

கொடைக்கானலில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற 2&ம் கிளை நேற்று தொடங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கல்யாணசுந்தரம், நிர்மல்குமார், மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நீதிபதி பார்த்திபன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இளம் வக்கீல்களுக்கு வாதாடும் திறமை முக்கியமானது. சிவில் வழக்குகளை வக்கீல்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

நீதிபதியாக உயர்வதற்கு கடின உழைப்பும் நேர்மையும் தேவை. தமிழகத்தில் அதிக நீதிமன்றங்கள் தேவை என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்துக்கு நான் உடன்படவில்லை. அதிக அளவில் குற்ற செயல்கள் நடப்பதாலேயே நீதிமன்றங்கள் திறக்கப்படு கின்றன.எனவே பிரச்சினைகள் இல்லாத நிலை ஏற்பட்டதால் நீதிமன்றங்கள் மூடப்படும். அதன் தேவை இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா வரவேற்றார். விழாவில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் எஸ்.பி.சீனிவாசன், கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் செழியன், கொடைக்கானல் வக்கீல்கள் சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நீதிபதி மோகனா நன்றி கூறினார்.