உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பிரியா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரைச் சேர்ந்தவர் பிரியா (வயது 43). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 அரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT