உள்ளூர் செய்திகள்

தென்காசி பழைய பஸ் நிலையத்தில் நின்றவரிடம் செல்போன் திருட்டு-3 வாலிபர்கள் கைது

கணேசன் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் ஓடி வந்து பிடித்தனர்.

நெல்லை:

தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொ ண்டு தப்பியோட முயன்றார்.

உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய செல்போனை அங்கு நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக கணேசன் தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த முகமது அலி(வயது 34) என்பதும், திருடிய செல்போனை தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த சுடலைகுமார்(30), புதுமனை 1-வது தெருவை சேர்ந்த ரசாக் முகமது ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT