ஒசூர் சார் ஆட்சியர் சாதி சான்றிதழ்கள் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நரிக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ்

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஒன்றியம் நெரிகம் ஊராட்சியில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலான்மைதுறை சார்பில் நரிக்குறவர், குருவிகாரன் சமுக இன மக்கள், பழங்குடி மக்களுக்கு சாதி சான்றில் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானது ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கினார்.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்

இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி தாசில்தார் பண்ணீர் செல்வி, டெப்டி தாசில்தார் அம்மு, வருவாய் அலுவலர் குமரேசன், கிராம அலுவலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் கங்கராஜ் துணைத் தலைவர் குருவா மற்றும் ஊழியர்கள் ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர் . மேலும் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவத்தனர்.

SCROLL FOR NEXT