தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வத்தலகுண்டு தி.மு.க. ஒன்றிய இளைஞரணி, பேரூர் இளைஞரணி சார்பில் தங்க கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கணவாய்பட்டி ஊராட்சி கன்னிமார் கோவில் அருகே உள்ள மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அகில இந்திய வளர்ச்சி கழக அணி, ஏ.பி.ஆர் அணியுடன் மோதியது. இதில் ஏ.பி.ஆர் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
முதல் பரிசினை வத்தலகுண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை வெற்றி பெற்ற ஏ.பி.ஆர் அணியின் உரிமையாளர் ரமேஷ், அணியின் கேப்டன் மோகன் ஆகியோரிடம் வழங்கினார். 2ம் பரிசான ரூ.10 ஆயிரத்தை நகரச் செயலாளர் சின்னதுரை வழங்கினார். 3ம் பரிசான ரூ-.5 ஆயிரத்தை மாவட்ட கவுன்சிலர் கனிகுமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.