சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி. 
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே பரபரப்பு: மீன் ஏற்றி வந்த லாரிகட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது

கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

கடலூர்:

கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT