கட்டிட தொழிலாளி கருப்புசாமி 
உள்ளூர் செய்திகள்

கம்பத்தில் கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

கட்டிட தொழிலாளி பணியின் போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கம்பம்:

கம்பம் புதிய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் கம்பம் போலீஸ் குடியிருப்பு அருகே ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது மதியம் உணவு இடைவேளையில் தனது மனைவி சித்ராவிடம் செல்போனில் பேசியபடி மாடி படிக்கட்டில் ஏறி சென்றார். அதன்பின்பு வெகு நேரமாகியும் அவர் கீழே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் மாடியில் சென்று பார்த்தபோது கருப்பசாமி பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். பின்னர் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கருப்பசாமிக்கு, முகைத் (4), யுகனியா (1) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT