உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்துநகை- பணம் திருட்டு

வீட்டில் இருந்த கமலா வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரை சேர்ந்தவர் மலர்வண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 37). இவர் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இவரது மாமியார் கமலாவும் வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்த நிலையில் கமலா நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

இது பற்றி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.