சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சிக்குட்பட்ட மறக்குடியில் ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டனர். அதன்படி அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சித்ரா வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இசககி, ஊர் பிரமுகர்கள் வீரபாண்டி, கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.