விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஊராட்சி தலைவர் முத்து குமார், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர பாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தொழிலதிபர் முனியசாமி, வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர், மயில்ராஜ் மகளிர் அணி முருகலட்சுமி, முத்துமாரி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எட்டயபுரத்தில் நியூ ஷாலோம் மிஷன் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.