உறுதிமொழி ஏற்பு. 
உள்ளூர் செய்திகள்

ரத்ததான விழிப்புணர்வு முகாம்

நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி அனைவரும் ரத்ததானம் வழங்கி ஜாதி வேற்றுமைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

திருத்துறைப்பூண்டி:

உலக ரத்ததானதினத்தை முன்னிட்டு திருத்துறை பூண்டி ராய் டிரஸ்ட் ரத்ததான குழு,ஆலத்தம்பாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான விழிப்புணர்வு முகாம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் வரவேற்று, ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி ,அனைவரும் ரத்ததா னம் வழங்கி ஜாதி வேற்று மைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.டாக்டர்.கௌரி கலைச் செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் உலக ரத்த தான உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நகராட்சி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், ரொட்டரியன்.ராஜ்நா ராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரமன்ற மேலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.இதில் நகராட்சி மற்றும் வட்டார மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SCROLL FOR NEXT