பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பால் உயர்வு கட்டணம் உயர்வை கண்டித்து பா.ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துபலவேசம், வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பால் உயர்வு கட்டணம் உயர்வை கண்டித்து பா.ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பாளை மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம் சார்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்க ளாக மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துபலவேசம், வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் குருகண்ணன், மேற்கு மண்டல தலைவர் மணிகண்டன், விவசாய அணி ராஜபாண்டியன், மாவட்ட மகளிரணி ஜெயசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.