உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை சிவன் கோவிலில் பத்திரதீப விழா

ஆடி அமாவாசை தினத்தையொட்டி குலசேகரநாதர் சுவாமி கோவிலில் பத்திரதீப விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.

மாலை மலர்

செங்கோட்டை:

செங்கோட்டை குலசேகரநாதர் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி பத்திரதீப விழா நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் கோவில் உள்வளாகத்தில் பத்திரதீபம் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் பக்தி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் 4 ரதவீதி களிலும் உலா வந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. ஏற்பாடு களை மண்டகப் படிதாரர்கள் செய்திருந்த னர்.