கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திண்டுக்கல்:

கொடைக்கானல் பகுதியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு பயன்படுத்திவிட்டு து£க்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.

எனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறை, தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக்  பூசப்பட்ட தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் து£க்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

எனவே, கொடைக்கானல் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

நமது சுற்றுச்சூழலை பாதுகாப்¢பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.