புதியம்புத்தூர்:
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், தாசில்தார் சுரேஷ், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா, புதியம்புத்தூர் பஞ்சாயத்து தலைவி பழனிச்செல்வி, மருத்துவ அலுவலர் அன்பு மாலதி, சித்த மருத்துவ அலுவலர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.